Pioneer Scheme
பெண்கள் சமூக சேவை மையம் (WOMANNGO) திருச்சி கீரனூர்.
(Woman NGO is the pioneer in menstrual hygiene management)
woman_org@rediffmail.com
வுமன் வெள்ளைரோஜா சுய உதவிக்குழு சானிட்டரி நாப்கின் தயாரிப்பு - ஸ்ரீரங்கம் / திருச்சி.
வுமன் வெண்மயில் சுய உதவிக்குழு சானிட்டரி நாப்கின் தயாரிப்பு - திருச்சி.
வுமன் வெண்தாமரை சுய உதவிக்குழு சானிட்டரி நாப்கின் தயாரிப்பு - கீரனூர்.
வுமன் வெண்மேகம் சுய உதவிக்குழு சானிட்டரி நாப்கின் தயாரிப்பு - கீரனூர்.
வுமன் வெண்புறா சுய உதவிக்குழு சானிட்டரி நாப்கின் தயாரிப்பு - புதுக்கோட்டை.

தமிழக முதல்வரின் இலவச நாப்கின் வழங்கும் சீரிய முன்னோடி திட்டத்திற்கு ஒத்துழைப்பு தருவது ஒவ்வொரு பெண்ணின் கடமையாகும்.
சுகாதாரம் என்பது வாழும் முறை...
மாதவிடாய் சுகாதாரம்
உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கினர் இந்தியர்கள். இவர்களில் ஏறத்தாழ 50% பெண்கள் ஆவர்.
எண்ணிக்கையில் 50 கோடியைக் கடந்துவிட்ட இந்தியப் பெண்களுக்கே உரிய பிரச்சனைகள் பல.
இதில் பெண்ணின் தனிப்பட்ட பிரச்சனையாகக் கருதப்படும் சமூகப்பிரச்சனை தான் மாதவிடாய் அல்லது மாதவிலக்கு ஆகும்.
மாதவிடாய் சுகாதாரம் குறித்த சில உண்மைகள்
மனித சமுதாயம் தழைக்க அவசியமானதும் பெண்ணிற்கு மட்டுமே ஏற்படக்கூடியது மாதவிடாய் நிகழ்வைப் பற்றிய சில உண்மைகள், ஒவ்வொரு பெண்ணுக்கும் அவளது வாழ்நாளில் சராசரியாக ஏழு ஆண்டுகள் மாதவிடாய் காலமாக இருக்கிறது.
பெண் குழந்தைகளுக்கு பள்ளிகளில் மாதவிடாய் சுகாதார வசதிகள் இல்லாததால் பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்துகின்றனர் அல்லது அந்த சமயம் விடுப்பு எடுக்கின்றனர்.
பெற்ற தாயோ, பள்ளி ஆசிரியையோ மாதவிடாய் குறித்து பெண்குழந்தைகளிடம் பேசுவதில்லை.
கிராமப் பகுதிகளில் சானிட்டரி நாப்கின் பயன்பாடு இன்றும் ஆடம்பரமாகவே கருதப்படுகிறது.
சுத்தமில்லாத துணிகளை பயன் படுத்துவது, அவற்றை சரியானபடி காய வைக்காமல் ஒளித்து வைப்பது, பயன்படுத்திய துணிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது, பயன் படுத்திய துணிகளை நீர் நிலைகளில் எறிவது, என மாதவிடாய் குறித்த தவறான புரிதல்களும் பலவிதமான கட்டுக்கதைகளும் நடைமுறைப் பழக்கங்களும் பெண்களை காலகாலமாய் நலம் குன்ற செய்து வருகிறது.
நாமனைவரும் பெண் சுகாதாரத்தில் மாதவிடாய் சுகாதாரம் பற்றிய பிரச்சனைகளுக்கு அறிவியல் பூர்வமான திட்டமிடல், செயல்படுத்துதல் மேலாண்மை மற்றும் கண்காணித்தல் ஒருமித்துப் ப்ங்கேற்றல் பல்வேறு அமைப்புகளுடன் இனைந்து மாதவிடாய் குறித்த தவறான கட்டுக்கதைகளையும் தடைகளையும் களைதல் என முதல்வரின் இந்த சீரிய முன்னோடி திட்டதிற்கு ஒத்துழைப்பு தர உறுதி ஏற்போம்.
சமூக நலம் கருதி வெளியிடுவோர்
பெண்கள் சமூக சேவை மையம்
(WOMAN NGO)
நிறுவன இயக்குனர்
திருமதி.கண்ணகி சந்திரசேகரன்
